தந்தி மாலை செய்திகள் | Thanthi evening News | Speed News | Thanthi Short News (20.11.2022)

x

"பாஜகவிற்கு எதிராக சதி செய்கிறார் ஈபிஎஸ்..."அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி...

ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது...சமூக நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் கருத்து பதிவு.

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கில், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தலைமறைவு...விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் விபத்து அல்ல...பெரிய பாதிப்பை ஏற்படுத்த தீவிரவாதிகள் தயார் ஆகி வந்ததற்கான அடையாளம் போல் தெரிகிறது என கர்நாடக டிஜிபி தகவல்.

தேசவிரோத தீவிரவாத அமைப்பின் செயல்...மத்திய புலனாய்வுத் துறை வந்துள்ளதாகவும், கர்நாடக காவல்துறை இணைந்து விசாரணை நடத்தும் என்றும் அமைச்சர் ஞானந்திரா தகவல்.

தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு...சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

நாளை விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...நாளை மறுநாள் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் தகவல்.

"வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது..."தமிழகம், புதுச்சேரி நோக்கி நகரக்கூடும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

வடிகால் பணிகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டு விட்டது...மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்.

"வாரிசு படம் வெளியாகவில்லை என்றால் போராட்டம் நடத்துவேன்..."நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு.


Next Story

மேலும் செய்திகள்