10 நிமிடத்தில் 27 செய்திகள் | தந்தி மாலை செய்திகள் | (16.03.2023)
- ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.
- அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆளும் கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால் நான்காம் நாள் அவை முடங்கியது...
- இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக எந்த கருத்தையும் பேசவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்......
- ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்துவதால் பதிலளித்துள்ளார்....
- இந்த விவகாரம் குறித்து பேச அனுமதித்தால், விளக்கம் அளிக்க தயாராக உள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்......
- அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க 16 எதிர்க்கட்சிகள் நேரம் கேட்டுள்ளனர்.
- இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளனர்.
- குடியரசு தலைவர் சுற்றுப்பயணத்தில் உள்ளதால், வரும் 21ஆம் தேதிக்கு மேல் சந்திப்பார் என தெரிகிறது....
- திமுக நிகழ்ச்சிகளில் பேனர்கள், கட் அவுட் வைக்க கூடாது என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
- கூட்டம் நடக்கும் இடத்தில் விளம்பரத்திற்காக ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் உரிய அனுமதி பெற்று வைக்கலாம் எனக்கூறியுள்ள அவர், உத்தரவை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்...
- எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் உருவபொம்மை எரித்ததால் பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்...
- வெறும் கண் துடைப்பா என கேள்வி எழுப்பிய அவர், நாங்கள் கிளர்ந்தெழுந்தால் என்ன ஆவது? என குறிப்பிட்டார்.
- பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டக்கூடாது என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்...
Next Story