"அற்புத வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி ரஞ்சித்" 'தங்கலான்' படப்பிடிப்பு நிறைவு
பா. ரஞ்சித் இயக்கத்தில் வரலாற்று பின்னணி கதையம்சத்துடன் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக புகைப்படத்தை பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ள விக்ரம், மிகவும் அற்புதமான நபர்களுடன் பணியாற்றியதாகவும், நடிகனாக மகிழ்ச்சியான அனுபவங்களை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். முதல் புகைப்படம் எடுத்தது முதல் ஒட்டுமொத்தமாக 118 நாட்கள் பணியாற்றியதாகவும், இந்த கனவில் வாழ வைத்த ரஞ்சித்திற்கு நன்றி என நெகிழ்ந்துள்ளார்.
Next Story