தஞ்சாவூர், விஏஓ அலுவலகம் உள்ளே செல்ல, ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் அதிர்ச்சி!..
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி விஏஓ அலுவலகம் உள்ளே செல்ல, ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதால் ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
செங்கிப்பட்டி கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில், ஆடை கட்டுப்பாடு தொடர்பாக அறிவிப்பு அட்டை வைக்கப்பட்டுள்ளது. அதில், கைலி, அரைக்கால் சட்டை, நைட்டி அணிந்து உள்ளே வரக் கூடாது என எழுதப்பட்டுள்ளது. கைலி கட்டிக் கொண்டு வந்தால் விஏஓ அலுவலக ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க மறுப்பதோடு, ஒரு குற்றவாளியை போல் நடத்துவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விவசாயிகள், கட்டுமான தொழிலாளிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிப்பது எந்த விதத்தில் நியாயம் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Next Story