கோர ரயில் விபத்து.. மவுனம் கலைத்த ராகுல்

x

ரயில் விபத்துக்கு பொறுப்பேற்காமல் தங்கள் மீது பாஜக பழி சுமத்தும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார்.

அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, நியூயார்க் நகரில் புலம்பெயர்ந்த இந்தியர்களை சந்தித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்ட ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று, அப்போதைய ரயில்வே அமைச்சர் பதவி விலகினார் என்றும், பிரிட்டிஷாரின் வடிவமைப்பால்தான் விபத்து ஏற்பட்டது என தாங்கவில்லை கூறவில்லை என்றும் கூறினார். ஒடிசா ரயில் விபத்து எப்படி நடந்தது எனக் கேட்டால், 50 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் என்ன செய்தது என பாஜகவினர் பேசுவார்கள் என்றும் அவர் கூறினார். எதார்த்தத்தை பாஜக ஏற்காது என்றும், தவறுகளுக்கு சாக்குபோக்குகளை மட்டுமே பாஜக கூறும் என்றும் பேசிய ராகுல் காந்தி, தவறுகளுக்கு பொறுப்பேற்காமல் பிறர் மீது பழி சுமத்துவதே பாஜகவின் பழக்கம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்