திருச்சியை உலுக்கிய ஹீலியம் பயங்கரம்! பலூன் வியாபாரி அதிரடி கைது
தெப்பக்குளம் பகுதியில் பலூன் வியாபாரி வைத்திருந்த ஹீலியம் கேஸ் நிரப்பிய வாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், பலூன் விற்பனையில் ஈடுபட்ட ரவி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சிறுவன் உள்பட 22 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 13 வயது சிறுவன் ஜீவானந்தம் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
Next Story