நடுக்கடலில் அதிகாரிகள் - மீனவர்கள் இடையே பயங்கர தள்ளுமுள்ளு | Nagapattinam

x

கோடியக்கரை கடற்கரையில், படகை பறிமுதல் செய்ய சென்ற அதிகாரிகளுக்கும் மீனவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோடியக்கரை கடலில், வெளியூர் மீனவர்கள் மீன்பிடிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள், கடலோர போலீசார், வெளியூர் படகை பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது, அதிகாரிகளுக்கும், மீனவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர், படகை பறிமுதல் செய்யாமல் அதிகாரிகளும் போலீசாரும் கரைக்கு திரும்பினர். இதைத் தொடர்ந்து, வேதாரண்யம் கடலோர காவல் குழும டி.எஸ்.பியிடம் இருதரப்பினரும் புகார் அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்