கட்டிடங்களை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்...தெறித்து ஓடிய மக்கள் - பதைபதைக்கும் வீடியோ காட்சி
துருக்கியின் மேற்குப் பகுதியில் டஸ் நகருக்கு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இஸ்தான்புல்லுக்கு கிழக்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டஸ் நகருக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6ஆகப் பதிவானது. இஸ்தான்புல் மற்றும் தலைநகர் அங்காராவில் அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கி 35 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்... பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், மக்கள் பயத்தில் பால்கனியில் இருந்து குதிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன... இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 20 நிமிடங்களில் மற்றுமொரு நில அதிர்வு உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.7ஆகப் பதிவாகியுள்ளது. உயிர் சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார்.
Next Story