முதியோர் இல்லம் மீது பயங்கர தாக்குதல்.. "ரஷ்யாவுக்கு இணையான பங்கு உக்ரைனுக்கும் உள்ளது" -ஐநா தகவல்.!
முதியோர் இல்லம் மீது பயங்கர தாக்குதல்.. "ரஷ்யாவுக்கு இணையான பங்கு உக்ரைனுக்கும் உள்ளது" -ஐநா தகவல்.!
உக்ரைனின் ஸ்டாரா கஸ்னியாங்கா நகரில் உள்ள முதியோர் இல்லத்தின் மீது கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உக்ரைனும் சரிபாதி காரணம் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் ராணுவம் அந்நாட்டு மக்களை மனித கேடயங்களாக உபயோகித்ததால் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படை முதியோர் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஏராளமான முதியோர் உயிரிழந்த நிலையில், இதில் ரஷ்யாவுக்கு இணையான பங்கு உக்ரைனுக்கும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரில் பொதுமக்களை உக்ரைன் மனித கேடயங்களாகப் பயன்படுத்தியதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் முதன்முறையாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது
Next Story