பீகாரில் வன்முறைச் சம்பவங்களால் தொடரும் பதற்றம்... ஆளுநர் ராஜேந்திர அர்லேகருடன் அமித்ஷா ஆலோசனை
பீகாரில் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகருடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். ராம நவமியை முன்னிட்டு ரோஹ்தாஸ் மற்றும் நாளந்தா மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. சசரம் நகரில் குண்டுவெடிப்பில் 6 பேர் காயமடைந்தனர். வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாளந்தா மற்றும் ரோஹ்தாஸ் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு கூடுதல் மத்திய ஆயுதப்படை காவல் படைகளை அனுப்புவதை அமித்ஷா உறுதி செய்தார். சசரத்திற்கு இன்று வருகை தர இருந்த நிலையில், அமித்ஷா தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.
Next Story