நுங்கால் பறிபோன உயிர் - திருவிழாவுக்காக வந்தவருக்கு நேர்ந்த சோகம் | Tenkasi

x

தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே நுங்கு பறிப்பதற்காக பனை மரம் ஏறிய இளைஞர், கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாவூர்சத்திரம் அருகே நாகல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கேரளாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கோயில் திருவிழாவுக்காக சொந்த ஊர் வந்துள்ளார். அப்போது, கோயில் அருகேயுள்ள பனை மரத்தில் நுங்கு பறிப்பதற்காக ஏறிய விஜயகுமார், மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்