2 வீடுகளில் பூட்டை உடைத்து கைவரிசை - சிசிடிவி மூலம் போலீசார் தீவிர விசாரணை

x

தென்காசி மாவட்டம் முதலியார்பட்டியில், இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து ஐந்தாயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

ஜாகீர் உசேன் என்பவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது குறித்து கடையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஜாகிர் உசேன் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தாயிரம் ரூபாய் கொள்ளையடித்தது தெரியவந்தது.

மேலும், அதே பகுதியை சேர்ந்த ஹனீபா என்பவர் வீட்டின் பூட்டை உடைத்தும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்