தி.க. பொதுக்கூட்டத்திற்கு எதிர்ப்பு - இந்து அமைப்பினர் ஊர்வலம் -தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த போலீசார்
- சங்கரன்கோவிலில் தி.க. பொதுக்கூட்டத்திற்கு எதிராக ஊர்வலம் சென்ற இந்து அமைப்பினரை கைது செய்த போலீசார், தொலைத்துவிடுவேன் என எச்சரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில், தி.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கி.வீரமணி பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு 2 நாட்களுக்கு முன்பிருந்தே எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர், திருவாசகம் பாடி ஊர்வலம் சென்றனர்.
- அவர்களை காவல்துறையினர் தடுத்த போது, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது இந்து முன்னணி அமைப்பினரை வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்தும், தூக்கிச் சென்றும் கைது செய்தனர்
- . அதையும் மீறி ஊர்வலம் சென்ற இந்து அமைப்பினரை இழுத்துச் சென்று பேருந்தில் போலீசார் ஏற்றினர்.
- அப்போது, உன்னை தொலைத்துவிடுவேன் என்று டிஎஸ்பி அசோக் மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- கோயில் வாசல் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் கலவர பூமி பூல் காட்சியளித்தது.
Next Story