தென்காசியில் இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம்... நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிய இளம்பெண் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை போட்ட அதிரடி உத்தரவு

x

தென்காசி மாவட்டம் கொட்டா குளத்தை சேர்ந்த வினித் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், இலஞ்சியை சேர்ந்த குருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்ததாகவும், அவரது பெற்றோர், தன்னை தாக்கிவிட்டு குருத்திகாவை கடத்திவிட்டுச் சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், குருத்திகாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இதுதொடர்பான உத்தரவின் பேரில், குருத்திகாவை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கடத்தப்பட்டாக கூறப்பட்ட குருத்திகா, நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், குருத்திகாவை 2 நாட்கள் காப்பகத்தில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

விசாரணை குறித்த அறிக்கையை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்