தென்காசி தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை - அதிமுக-வுக்கு அதிர்ச்சி முடிவு... நடந்தது என்ன திக் திக் நிமிடங்கள்

x

தென்காசி சட்டப்பேரவை தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி உறுதியாகி உள்ளது. வழக்கு தொடர்ந்தது முதல், மறு வாக்கு எண்ணிக்கை வரை முழுமையாக விளக்குகிறது இந்த தொகுப்பு...

தென்காசி தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பழனி நாடார் வெற்றியில் குளறுபடி இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்து. தற்போது நடந்த மறுவாக்கு எண்ணிக்கையிலும் பழனி நாடாரே வெற்றி வாகை சூடியுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், தென்காசி தொகுதிக்கும் தேர்தல் நடந்தது. திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸிற்கு அந்த தொகுதியை ஒதுக்கியிருந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடாரும், அதிமுக சார்பில் செல்வ மோகன் தாஸ் பாண்டியனும் களமிறக்கப்பட்டனர். மொத்தமாக 18 வேட்பாளர்கள் அந்த தொகுதியில் களத்தில் இருந்தார்கள். தேர்தல் முடிந்து, அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பழனி நாடார் 89 ஆயிரத்து 315 வாக்குகளும் செல்வமோகன் தாஸ் பாண்டியன் 88 ஆயிரத்து 945 வாக்குகளும் பெற்றிருந்தனர். 370 வாக்குகள் வித்தியாசத்தில் பழனி நாடார் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் ஏதோ குளறுபடி நடந்திருப்பதாக அதிமுக வேட்பாளருக்கு சந்தேகம் எழுந்தது. காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியை ஏற்க மறுத்தார் செல்வ மோகன்தாஸ்

கடைசி இரண்டு சுற்றுகளை மீண்டும் என்ன வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிானார். பல காலமாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணையில், 10 நாட்களுக்குள் தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில்தான் வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தரப்பும், அதிமுக தரப்பும் எதிர்பார்ப்புடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர். பரபரப்பான சூழலில் வாக்குகள் எண்ணப்பட்டது. முதலாவதாக தபால் வாக்குகளில் பெறப்பட்ட கெசட் கையெழுத்து சரிபார்க்கப்பட்டு அவை பிரித்து வைக்கப்பட்டது. செல்லத்தக்கதாக இருந்த 2576 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில்

பழனி நாடாருக்கு 1606 வாக்குகள் கிடைத்தது, செல்வ மோகன் தாஸ் பாண்டியனுக்கு 673 வாக்குகள் கிடைத்தது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்த போதிலும் தபால் வாக்குகளில், காங்கிரஸ் வேட்பாளரே முன்னிலை வகித்தார். இறுதியாக 368 வாக்குகள் வித்தியாசத்தில் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது

கடந்த முறை 370 வாக்குகள் பெற்றிருந்த பழனி நாடார் இந்த முறை 2 வாக்குகள் குறைவாக பெற்று, மீண்டும் தன் வெற்றியை நிரூபித்துள்ளார். வெற்றியின் மீது பலத்த விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதிமுக தரப்பிற்கு தக்க பதிலடி கொடுத்ததாகவே, காங்கிரஸ் தொண்டர்கள் வெற்றிக்கூச்சலிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்