கோயில் கும்பாபிஷேகத்தில் 3 பெண்கள் செய்த பகீர் காரியம்.. காட்டிக்கொடுத்த CCTV
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவில் கும்பாபிஷேக விழாவில், மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்
இரணியல் அருகே கள்ளியங்காடு பகுதியில் உள்ள சிவபுரம் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, விஜயலெட்சுமி என்ற மூதாட்டி அணிந்திருந்த, 2 சவரன் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
இது குறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில், கோயில் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட ரஞ்சிதா, அவரது தோழிகளான மாரி, லலிதா ஆகிய மூவரை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 2 சவரன் நகையையும் பறிமுதல் செய்தனர்.
Next Story