முதன்முறையாக மைனஸ் டிகிரியை தொட்ட தட்பநிலை... உறை பனியில் உறைந்து போன உதகை
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிரும் நிலவுகிறது. அதிகாலை நேரங்களில் கடும் உறைபனி பொழிவு காணப்பட்டது. இதனால் புல்வெளிகள் அனைத்தும் வெண்பனிப்போர்வை போர்த்தியதைப் போல் காட்சியளிக்கின்றன. நகரப்பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 1 டிகிரி செல்சியசும், சமவெளி பகுதியில் மைனஸ் 1 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது. குளுமையான சூழலை சுற்றுலாப்பயணிகள் அணு அணுவாக ரசித்து வருகின்றனர்...
Next Story