வெற்றிமாறனுக்காக காத்திருக்கும் தெலுங்கு ரசிகர்கள்... வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்

x
  • வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள விடுதலை திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
  • இதற்காக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெற்றிமாறனிடம் தெலுங்கில் எப்போது படம் இயக்குவீர்கள் எனவும் ஜூனியர் NTR உடன் கதை விவாதம் நடந்ததாக வரும் தகவல்கள் உண்மையா எனவும் கேட்கப்பட்டது.
  • இது, உண்மைதான் என தெரிவித்த வெற்றிமாறன், நிச்சயமாக தெலுங்கில் படம் இயக்குவேன் என கூறியுள்ளார்.
  • முன்னதாக, ஆடுகளம் படத்திற்கு பிறகு வடசென்னை படத்தின் கதையை அல்லு அர்ஜுனுக்கு சொல்லியதையும் வெற்றிமாறன் நினைவுகூர்ந்தார்.
  • விடுதலை 2ம் பாகம் எடுத்து முடித்து விட்டதாகவும், ஆனால் தற்போது கிடைத்துள்ள வரவேற்பால் சில காட்சிகளை எடுக்க 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்