வீடு புகுந்து தர தரவென இழுத்து சென்று தெலங்கானா மாநில பாஜக தலைவர் கைது

x

தெலங்கானாவில் அம்மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், பாஜக மற்றும் பி.ஆர்.எஸ் கட்சிக்கு இடையேயான மோதல் போக்கை விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ளது. கர்நாடகாவை தொடர்ந்து தெலங்கானாவிலும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் தேசிய அரசியலின் மீது அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சயை, நள்ளிரவில் அவரது கரிம்நகர் இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருடன் ஒத்துழைக்க மறுத்த பண்டி சஞ்சயை போலீசார் தர தரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்றியது, அவரது தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்து நால்கொண்டா மாவட்டத்தில் உள்ள பொம்மலா ராமராம் காவல் நிலையத்தில் பண்டி சஞ்சய் அழைத்துச் செல்லப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்