பலூன்கள் மூலம் படகுகளை கரைக்கு ஏற்றி, இறக்கும் தொழில்நுட்பம் - பாம்பன் கடல் பகுதியில் தொடக்கம்

x

பலூன்களை பயன்படுத்தி படகுகளை கரைக்கு ஏற்றி, இறக்கும் நவீன தொழில்நுட்பம் பாம்பன் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடலுக்குள் படகுகள் பழுதாகும் போது, அவற்றை கரைக்குக் கொண்டு வந்து சரி செய்து, மீண்டும் கடலுக்குள் இறக்கி விடுவது மீனவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனிடையே, கயிறு மற்றும் கம்பியால் படகு கட்டப்பட்டு மின்சார இழுவை இயந்திரத்துடன் இணைத்து, படகின் அடியில் காற்று நிரப்பிய பலூன்களை வைத்து, படகை இழுக்கின்றனர். பின்னர், பலூன்கள் மேல் படகு நகர்ந்து கடலில் இறங்குகிறது. இந்த தொழில்நுட்பத்தை கடலோர மாவட்டங்களில் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்