பள்ளி மாணவன் மீது டீச்சருக்கு மலர்ந்த காதல் -வெளியான அதிர்ச்சி தகவல்

x

பள்ளி மாணவன் மீது டீச்சருக்கு மலர்ந்த காதல் -வெளியான அதிர்ச்சி தகவல்

சென்னை அம்பத்தூரில், பள்ளி மாணவன் தற்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்த சிறுவன், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மே மாதம் 12 ஆம் வகுப்பு படித்து முடித்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி கலந்தாய்வுக்காக, மாநில கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவன், வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மாணவனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், தான் பயின்று வந்த பள்ளியில் ஷர்மிளா என்ற ஆசிரியை மாணவன் காதலித்து வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், மாணவனிடம் இருந்து தொடர்பை ஷர்மிளா முறித்துக் கொண்டார்.

இதனால் விரக்தி அடைந்த மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆசிரியை ஷர்மிளாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்