"நாங்க டாஸ்மாக் ஊழியரா? அரசு ஊழியரா?" டாஸ்மாக் ஊழியர் கூட்டத்தில் பகீர் கேள்வி

x

டாஸ்மாக்கில், அரசுக்கு வர வேண்டிய வருவாயை மடைமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

தாம்பரத்தில் நடைபெற்ற டாஸ்மாக் ஊழியர் கூட்டத்தில் பங்கேற்ற பின் டாஸ்மாக் ஊழியர் சம்மேளன தலைவர் பொன்முடி, பொதுச் செயலாளர் திருச்செல்வன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, டாஸ்மாக் முறைகேடுகளை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

தொழிற்சங்க உரிமையை பறிக்கும் வகையில் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்