குறி வைக்கப்பட்ட கர்நாடக அரசு அதிகாரிகள்.. குவியல் குவியலாக சிக்கிய தங்கம்.. மின்வாரிய அதிகாரியிடம் மட்டும் ரூ.5.6 கோடி
கர்நாடகாவில் 15 அரசு உயர் அதிகாரிகளை குறி வைத்து 53 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர். பெங்களூரு மின்சார வாரியத்தின் தலைமை பொறியாளர் ரமேஷ் தொடர்புடைய 4 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், வருமானத்திற்கு அதிகமாக 5 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களூரு நகர் தொழில் துறை இணை இயக்குநர் நாராயணப்பா தொடர்புடைய 10 இடங்களில் நடத்திய சோதனையில், 2 கோடி 58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், ஆவணங்களை பறிமுதல் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story