தஞ்சை கலை பொருட்கள் கண்காட்சி சென்னையில் துவக்கம் - கண்டு வியக்கும் சென்னை வாசிகள்
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி, சென்னை வணிக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூரில் பகுதியில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கான கண்காட்சியை சென்னை அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்தார். இந்த கண்காட்சியில் சுவாமிமலை ஐம்பொன்சிலை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீனை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருபுவனம் பட்டு சேலை, நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் நெட்டி வேலை, நரசிங்கம் பேட்டை நாதஸ்வரம், தஞ்சாவூர் ஓவியம் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கண்காட்சியின் மூலம் பாரம்பரியம் மிக்க பொருட்களின் பெருமைகளையும் அவற்றின் தயாரிப்பு விதம் குறித்து அறிந்துகொள்ள முடிகிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
Next Story