"ரெஸ்ட்-ஆ எனக்கா..?" அடுத்த ரவுண்டுக்கு தயாரான மழை..! - 4 நாட்களுக்கு இனி அதிரடி ஆட்டம் தான்

x

தமிழகத்தில் வரும் 20ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் வரும் 20ம் தேதி வரை, தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 20ம் தேதி, கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படுவதுடன், ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடலில் வலுபெறக்கூடும்.

இந்நிலையில், இன்று அந்தமான் கடல், அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலிலும்,

நாளையும் நாளை மறுநாளும் தென்கிழக்கு வங்கக்கடலிலும்,

நாளை மறுநாள் அதை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடலிலும்,

வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில், தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலிலும், தெற்கு ஆந்திர கடலோரம் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலிலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்