தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை

x

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடிமின்னலுடன் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரூர் மாநகர் மற்றும் மண்மங்கலம், புலியூர், ஏமூர், வெள்ளியணை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

ஈரோடு நகரில் மட்டுமின்றி பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, பவானி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் மானாவாரி பயிர்கள், நன்கு செழித்து வளரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் 2 மணிநேரத்திற்கு மேல் கனமழை வெளுத்து வாங்கியது.


Next Story

மேலும் செய்திகள்