ஆம்னி பேருந்து கட்டணம் 3 மடங்கு உயர்வு

x

விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ள நிலையில், ஆம்னி பேருந்து கட்டணம் அதிகளவில் உயர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனிடையே, ஆம்னி பேருந்து கட்டணம் மூன்று மடங்காக உயர்ந்து உள்ளது. நாளை திருநெல்வேலியிலிருந்து சென்னை வர ஆயிரத்து 500 ரூபாயாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஒன்றாம் தேதி 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோவையிலிருந்து சென்னைக்கு வர ஆயிரம் ரூபாயாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், ஒன்றாம் தேதி 3 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல், திருச்சியிலிருந்து சென்னைக்கு வர 700 ரூபாய் கட்டணமாக இருந்த நிலையில், ஒன்றாம் தேதியன்று இரண்டாயிரத்து 800 ரூபாய் வரை வசூலிக்கப்படவுள்ளது. இவ்வாறு பல ஊர்களில் இருந்து சென்னை வரும் ஆம்னி பேருந்து கட்டணம் மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்