நம்ம ஊரு ரவா இட்லி சாம்பார்...உலக அளவில் டிரெண்டிங் !...வைரலான பிரிட்டன்காரரின் வீடியோ
என்னதான வித விதமாக உணவுகளை புதிது புதிதாக கண்டுபிடித்து அறிமுகம் செய்தால் நம்ம ஊரு உணவு வகைக்கு எப்போதுமே மவுசு இருந்து கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில், பிரிட்டனைச் சேர்ந்த ஜேக் டிரையான் என்ற இளைஞர் வெளியிட்ட நம்ம ஊரு சாம்பார் இட்லி தயாரிக்கும் வீடியோ உலக அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது.
பிளாண்ட் ஃபியூச்சர் எனும் பெயரில் இன்ஸ்டாகிராமில் பக்கம் வைத்திருக்கும் டிரையானுக்கு, 6.37 லட்சம் பேர் ஃபாலோயர்களாக இருந்து வருகின்றனர்.
குறிப்பாக இந்திய சமையல் வகைகளைச் செய்வதில் அலாதியான ஆர்வம்கொண்ட இவர், ஒவ்வொரு மாநிலத்தின் உணவுவகைகளுக்கும் ஒரு வாரம் என சமையல் வீடியோக் களை வெளியிட்டுவருகிறார்.
இதுவரை குஜராத் வாரம், ராஜஸ்தான் வாரம், பஞ்சாப் வாரம், மகாராஷ்டிர வாரம் ஆகியவற்றைத் தொடர்ந்து,
தென்னிந்தி யாவின் தெலங்கானா வாரம், ஆந்திரப்பிரதேச வாரம், கேரள வாரம், கர்நாடக வாரம் என, அந்தந்த மாநிலங்களுக்கே உரிய பிரத்யேக சமையல் வகைகளைச் செய்து காட்டியுள்ளார்.
தமிழ்நாடு வாரத்தில், கேரட் பொறியல், பொங்கல், ரவா இட்லி சாம்பார், அடை தோசை, மோர் குழம்பு, உருளைக்கிழங்கு மசாலா என டிரையான் அசத்தியுள்ளார். ஆனாலும், பார்வையாளர்களுக்குப் பிடித்தது என்னவோ, டிரையான் செய்த ரவா இட்லி சாம்பார்தான்!
வெள்ளிக்கிழமை காலைவரை ரவா இட்லி சாம்பார் பதிவை இரண்டரை லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஒன்றே முக்கால் லட்சம் பேர், தங்களுக்குப் பிடித்தமான உணவு என்று தெரிவித்துள்ளனர்.
மந்தமாக இருப்பவர்களைப் பார்த்து சாம்பார் என கேலி செய்பவர் களை கவனிக்க வைத்திருக்கிறது பிரிட்டன் காரரின் சாம்பார் இட்லி.