9நாளே ஆன பெண்குழந்தையை..மூச்சை பிடித்து துடி துடிக்க கொன்ற தாய்..ஈரக்குலையை நடுங்க வைத்த சம்பவம்...
பூனாச்சி நத்தமேட்டை சேர்ந்த சகுந்தலா தேகிக்கு ஏற்கனவே 3 வயது பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கருவுற்ற சகுந்தலா தேவிக்கு கடந்த ஏப்ரல் 18ம் தேதி 2வதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது... குழந்தை பிறந்து 9 நாட்கள் கழிந்த நிலையில், தான் வெளியில் துணி துவைக்க சென்ற போது தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அசைவு ஏதுமின்றி இருந்ததால் உடனே மருத்துவமனையில் அனுமதித்ததாகவும், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததாகவும் சகுந்தலா தேவி கூறியுள்ளார். 2 மாதங்களுக்குப் பிறகு வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தை தலையில் உள் காயம் ஏற்பட்டு இறந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் சகுந்தலா தேவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், 2வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியில் சகுந்தலா தேவியே தன் குழந்தையை மூச்சைப் பிடித்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.