புதிய கொரோனா பரவல் எதிரொலி..."அடுத்த 6 மாதங்களுக்கு.." அதிரடி உத்தரவு
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில், அடுத்த ஆறு மாதங்களுக்கு, மாதிரி சோதனை கருவிகளை, முன்கூட்டியே வாங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து வெளியிட்டப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உயிரியல் மருத்துவ பொறியாளர்களிடம் சரி பார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்படாத செறிவூட்டிகள் பாதுகாப்பான இடத்தில் சேமிக்கப்பட வேண்டும் என்றும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் அவசரக்கால பயன்பாட்டிற்கு தயாராக வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. N95 முக கவசம், பிபிஇ கிட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மக்கள் கூடுவதை தவிர்ப்பதோடு தடுப்பூசி மையம் முழு வீச்சில் செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வார்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள கூடுதல் படுக்கைகளின் இருப்பு சரிபார்க்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது
Next Story