செப்டம்பர் முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000... யாருக்கெல்லாம் கிடைக்கும்?
- தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதற்காக 2023-24 பட்ஜெட்டில் 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- முழு ஆண்டிற்கும் இந்த தொகை ஒதுக்கப்பட்டால் மாதத்திற்கு 583 கோடி ரூபாய் செலவிடப்படும்.
- இதன் மூலம் மாதத்திற்கு 58 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கமுடியும்.
- இத்திட்டம் செப்டம்பர் 15ல் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் 2023 மார்ச் வரை, 7 மாதங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டால் மாதத்திற்கு ஒரு கோடி குடும்பத்தலைவிகள் பயனடைவார்கள்.
- தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 21 லட்சம் ரேசன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உதவித் தொகை பெறத் தகுதிகளை இறுதி செய்ய ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது.
Next Story