அமைச்சர் பிடிஆர்-க்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால்
ஆடியோ தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆடியோவின் உண்மைத்தன்மையை சுதந்திரமான முறையில் தடயவியல் தணிக்கை செய்யக்கோரி, தமிழக பாஜக தலைவர்கள் குழு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்க உள்ளதாகவும், யார் குரலில் வேண்டுமானாலும் இப்படி பேசி ஆடியோ வெளியிடலாம் என தமிழக நிதி அமைச்சர் சமாளித்துக் கொண்டு இருப்பதாகவும் கூறி உள்ளார். ஆடியோவில் உள்ள கருத்துகளை தான் பேசுவது போல, ஒரு ஆடியோ வெளியிடுமாறு சவால் விடுப்பதாகவும் அண்ணாமலை கூறி உள்ளார். இதனிடையே, தமிழக பாஜக துணைத்தலைவர் வி.பி துரைசாமி, கரு.நாகராஜன் உள்ளிட்டோர், இன்று மாலை 7 மணிக்கு ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளனர்.
Next Story