"நான் என் அப்பா பேச்சை கேட்டிருந்தால்..."- ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
ஒரு அரசியல்வாதியின் மனைவி என்று சொல்வதை விட, அரசியல்வாதியின் தாய் என்று சொல்வதைத்தான் தனது தாய் பெருமையாக கூறியதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். அன்னையர் தினத்தையொட்டி, சென்னை பாரிமுறையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் பெண் மருத்துவர்களுக்காக கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக எம்பி கனிமொழி என்.வி.என் சோமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை, தாய்மார்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்றார்.
Next Story