தமிழக, இலங்கை மீனவர்கள் கைது... இலங்கை கடற்படை வெளியிட்ட திடுக் காரணம்

x

இலங்கையின் குதிரைமலை முனைக்கு அருகே அத்துமீறி புகுந்ததாக, தமிழக நாட்டுப் படகில் இலங்கை கடற்படையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது படகில் 434 கிலோ கிராம் அளவிலான கேரளக் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை, இலங்கை கடற்படையினர் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

விசாரணையில் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட்டுள்ளதாகவும், தலா ஐந்து தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்கள் என மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்