சர்வதேச ஆர்மகெடன் செஸ் இறுதிப்போட்டியில் முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்தி 16 வயது தமிழக வீரர் சாதனை
- பெர்லின் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் உலக ரேபிட் செஸ் சாம்பியன் நோடிர்பெக் உடன் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது வீரர் குகேஷ் மோதினார்.
- விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் நோடிர்பெக்கை, குகேஷ் தோற்கடித்து சாம்பியன் ஆனார்.
- தனது வெற்றி தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள குகேஷ், இந்த தொடர் மூலம் தனக்கு சிறந்த அனுபவம் கிடைத்து இருப்பதாகக் கூறி உள்ளார்.
- இதனிடையே, சாம்பியன் பட்டம் வென்ற குகேஷிற்கு செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
Next Story