"இந்தியாவிலேயே தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை..." - அரசை புகழ்ந்துள்ள ஆளுநர் உரை... முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

x

மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். ஆளுநர் உரையின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்...

இந்தியாவிலேயே பல்வேறு சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது என்றும்,

முன்னோடித் திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 1 கோடியே 1 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளார்கள் என்றும் ஆளுநர் கூறினார்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது கொரோனா அலைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாகக் கையாண்டது என்றும்,

விபத்தில் சிக்கியவர்களை காக்க நாட்டிலேயே முதல் முறையாக 'நம்மை காக்கும் 48' திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மகளிர் அனைவருக்கும் கட்டணமில்லாப் பயணம் திட்டம் மூலம் சமூக எழுச்சி ஏற்பட்டு இருப்பதாகவும்,,

மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும் என்றும் ஆளுநர் கூறினார்.

பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும்,

மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உயர்த்தப்பட்டதன் மூலம் ஆறே முக்கால் லட்சம் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறுவார்கள் என்றும் கூறினார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக அரசு நடத்தியதாகவும்,....

விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்