தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர்..! - சபாநாயகர் அப்பாவு வெளியிட்ட அறிவிப்பு
2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.
அதன் பிறகு சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அதில் ஏப்ரல் 21ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 28ஆம் தேதி நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைக்கான பதிலுரையை அமைச்சர்கள் வழங்க உள்ளனர்.
மார்ச் 29ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ஆம் தேதி வரை 15 வேலை நாட்கள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
இதில் 7 நாட்கள் மாலை பேரவை கூட்டமும் நடைபெற உள்ளது.
Next Story