நள்ளிரவில் தமிழக பாஜக செயலாளர் அதிரடி கைது.. "அடுத்து யாரு.. பயமுறுத்தி பார்க்கிறீங்களா?" - கொந்தளிக்கும் மகளிரணியினர்

x

தமிழக பாஜகவின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை , மதுரை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்...

மதுரை மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சியில், வார்டு உறுப்பினர் விஸ்வநாதன் என்பவர், தூய்மை பணியாளர் மரணத்திற்கு காரணமாக இருந்ததாகவும், இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், எஸ்.ஜி.சூர்யா சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். கடந்த 7-ஆம் தேதி அவர் பதிவிட்ட நிலையில், மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் சார்பில், ஜூன் 12-ஆம் தேதி மதுரை காவல் ஆணையரிடம் புகாரளிக்கபட்டது. அதில், மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியும், விஸ்வநாதன் என்ற கவுன்சிலரும் கிடையாது என குறிப்பிட்டு, வதந்தி பரப்பி அவதூறு ஏற்படுத்தும் வகையில் பதிவிட்ட, எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார், எஸ்.ஜி.சூர்யாவை நேற்று நள்ளிரவில் சென்னை தியாகராய நகரில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மதுரைக்கு அழைத்துச் சென்றனர். இதனைக் கண்டித்து பாஜகவினர், எழும்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்