ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும் - தென்னக ரயில்வே மேலாளர்
தமிழ்நாட்டில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என தென்னக ரயில்வே மேலாளர் ஆர்.என் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் ரயில்வேக்கான அறிவிப்புகள் குறித்து, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தென்னக ரயில்வே மேலாளர் ஆர்.என்.சிங் காணொலி வழியாக உரையாற்றினார்.
சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ரயில்வே தலைமை அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.என்.சிங், தமிழ்நாட்டில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்றும், டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் வட இந்தியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் அடுத்த 36 மாதங்களுக்குள் புத்துருவாக்கம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.