இன்றைய தலைப்பு செய்திகள் (06-09-2023) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

மோடியின் இந்தோனேசியா பயணம் பற்றிய விபரத்தில், 'பாரத பிரதமர்' என குறிப்பிட்ட வெளியுறவு துறை...குடியரசு தலைவரைத் தொடர்ந்து, பிரதமரையும் 'பாரத பிரதமர்' என செய்தி குறிப்பை வெளியிட்டது, மத்திய அரசு...

பா.ஜ.க.வுக்கு 'இந்தியா' என்ற சொல்லே கசந்து வருகிறது...இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை தேர்தலில் விரட்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...

நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைக்காதது தான் சனாதனத்தின் சிறந்த உதாரணம்...சனாதன ஒழிப்பு விவகாரத்தில் மன்னிப்பு கோர முடியாது என்றும் அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்...

மக்களை திசை திருப்பவே சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்...ஜாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி அ.தி.மு.க. என்றும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி...

தமிழகத்தில் கஞ்சா, மது தாராளமாக கிடைப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு...லட்சக்கணக்கில் இருக்கும் கடன் சுமை பற்றி பேசாமல், சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி பேசி வருவதாகவும் விமர்சனம்....

சனாதன தர்மம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திருப்பதி தேவஸ்தானம் அதிரடி...ஒரு கோடி முறை கோவிந்த நாமம் எழுதி வரும் பக்தர் குடும்பத்திற்கு விஐபி தரிசனம் உள்ளிட்ட சலுகைகள் அறிவிப்பு...

கிருஷ்ணர் அவதரித்த நாளான இன்று, நாட்டின் பல பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்...வெண் பட்டாடையுடன் சிறப்பு தோற்றத்தில் கிருஷ்ணர் - பாமா ருக்மணி திருக்கல்யாணம் கோலாகலம்...

நிலவில் லேண்டர் கருவியை பிரக்யான் ரோவர் கடந்த 30 ஆம் தேதி எடுத்த முப்பரிமாண புகைப்படம் வெளியீடு...சிவப்பு மற்றும் சியான் கண்ணாடிகள் மூலம் நிலவின் முப்பரிமாண புகைப்படத்தை பார்க்கலாம்...

டெல்லியில் 75 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.....மதுரையை சேர்ந்த முனைவர் டி. காட்வின் வேதநாயகம் நல்லாசிரியர் விருது பெற்றார்...

ஆசிரியர்களின் 5 முக்கிய கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரிசீலனை...விரைவில் அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்...

அமைச்சராக செந்தில் பாலாஜி இருப்பது, தார்மீக ரீதியாக சரி அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து...இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிரான மனுக்கள் முடித்து வைக்கப்பட்டன...


Next Story

மேலும் செய்திகள்