"பாலியல் தொழில் செய்ய சொல்லி மிரட்டல்" - அலறியடித்து ஓடிவந்த நடிகை.. பரபரப்பு புகார்
தன்னை பாலியல் தொழிலுக்கு அழைத்து சிலர் மிரட்டல் விடுப்பதாக துணை நடிகை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த 20 வயதான துணை நடிகை, பாக்யராஜ் இயக்கிய உலக சாதனை 369, அகத்தியன் குறும்படம், மற்றும் சில விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது தோழி மூலம் அறிமுகமான சினேகா, பிரகாஷ், ரியா, நந்தினி ஆகிய நால்வரும் தன்னை பாலியல் தொழிலுக்கு அழைத்து மிரட்டல் விடுப்பதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார். மேலும் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, தன்னை மிரட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
==
Next Story