"தமன்னா தான் எல்லாம்...விஜய் ஒன்னுமே இல்ல"
தமன்னா தான் எல்லாமே என அவரது காதலர் நடிகர் விஜய் வர்மா போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாகவே நட்சத்திர ஜோடிகளில் , இருவரில் யார் பெரிய ஆள் என்ற ஒப்பீடு தலைதூக்குவது வழக்கம். அந்த வகையில், தமன்னா தன்னுடைய காதலர் விஜய் வர்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ரசிகர் ஒருவர், தமன்னா தான் எல்லாம், விஜய் வெறும் விஜய் மட்டும் தான் என ட்வீட் செய்திருந்தார். அதாவது, விஜய் வர்மா ஒன்றுமே இல்லை என்ற அர்த்தத்தில் அவர் பதிவிட்ட இந்த ட்வீட்டிற்கு ரசிகர்களிடம் பல தரப்பான கமெண்டுகள் வந்த வண்ணம் இருந்தன. இதில் , விஜய் வர்மாவே "இதை நான் ஒப்புக்கொள்கிறேன்" என கமெண்ட் செய்தது ஹைலைட்டாக மாறியுள்ளது. தனது காதலியிடம் தோல்வியடையும் மனப்பக்குவம் இருக்கும் நீங்கள் தான் எல்லாமே என பல பெண் ரசிகைகளும் விஜய் வர்மாவின் ட்வீட்டிற்கு ஹார்ட்டின் விடுகின்றனர். சிறிது நேரத்தில் தமன்னாவிடம் இருந்து இளவரசர் எமோஜி பதிலாக வந்தது.