டி20 உலகக் கோப்பை : "இந்தியாவுக்கு வாய்ப்புகள் அதிகம்"- முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை

x

டி20 உலகக் கோப்பை : "இந்தியாவுக்கு வாய்ப்புகள் அதிகம்"- முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை


எதிர்வரும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்து உள்ளார். கெளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதனும் திறந்து வைத்தனர். தொடர்ந்து அங்கிருந்த வீரர்களுடன் ரவி சாஸ்திரி கிரிக்கெட் விளையாடினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், டி20 உலகக் கோப்பை தொடரில் சுலபமாக இந்தியா அரையிறுதி செல்லும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்