கழிவுநீர் தொட்டியை தோண்டும் போது பயங்கரம்...விஷவாயு தாக்கி இரண்டு தூய்மை பணியாளர்கள் பலி
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டி பகுதியில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் அன்று பொதுமக்களும் காவல்துறையும் சூழ்ந்திருந்தனர்…பள்ளியில் பின்புறத்திலுள்ள கழிவறையை ஜேசிபி வைத்து இடித்த போலீசார்… தரை பகுதியை உடைத்து கழிவுநீர் தொட்டியை தோண்டியிருக்கிறார்கள்…
சிறுது நேரத்திலேயே செப்டிக் டேங்க உள்ளே இறங்கிய தீயணைப்பு துறையினர்… மயக்க நிலையிலிருந்த இரண்டு பேரை கொத்தாக தூக்கிவந்து வெளியில் போட்டுள்ளனர்…உடலை சுத்தம் செய்து முதலுதவி கொடுப்பதற்குள்… அந்த இரண்டு உயிர்களும் பரிதாபமாக பலியாகியிருக்கிறது…
வின்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் இதே நவீன யுகத்தில் இன்னும் மலக்குழிகளில் மனிதர்கள் இறங்கி மாண்டு போகும் அவலம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நடந்தது ஒரு வகையில் விபத்து என்று சொல்லப்பட்டாலும் அதில் ஒளிந்திருக்கும் குற்றங்கள் மீது வெளிச்சம் பாய்ச்ச விசாரணை தொடங்கினோம்…
உயிரிழந்தவர்களின் பெயர் கோவிந்தன் மற்றும் சுப்புராயலு. இருவருக்கும் கிட்டதட்ட நாற்பது வயதிருக்கும். மீஞ்சூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலைப்பார்த்து வந்திருக்கிறார்கள். இந்த சூழலில்தான் கோடை விடுமுறை என்பதால் அத்திப்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்வதற்கு இவர்களை அழைத்திருக்கிறார்கள்.
எந்தவித பாதுகாப்பு கவசமும் இல்லாமல் இருவரும் கழிவுநீர் தொட்டியை திறந்து வேலையை தொடங்கியிருக்கிறார்கள். அதில் சுப்புராயலுதான் முதலில் தொட்டிக்குள் இறங்கியிருக்கிறார்…உள்ளே இறங்கிய சிறிது நேரத்தில் சுப்புராயலு விஷவாயு தாக்கியதால் மயக்கமடைந்திருக்கிறார்…