திருச்செந்தூரில் சுவாமி தரிசனம்..Eps கையில் 4 அடி வேல்..

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். வீரபாண்டியன் பட்டினம், அடைக்கலாபுரம், ஆறுமுகனேரி உள்ளிட்ட இடங்களில் வழி நெடுக அதிமுக தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர், திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் உள்பிரகாரத்தில் உள்ள சண்முகர், பெருமாள், தட்சிணாமூர்த்தி சன்னதிகளில், ஈபிஎஸ் வழிபாடு நடத்தினார். பின்னர், சூரசம்ஹாரமூர்த்திக்கு நடந்த பூஜையில் அவர் கலந்து கொண்டார். திருச்செந்தூர் அதிமுக நிர்வாகி சார்பில் எடப்பாடி பழனச்சாமிக்கு, நாடாளுமன்ற, சட்டமன்றம் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டி 4 அடி வேல் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்