ரஷ்ய ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல் - உக்ரைன் எல்லையில் பயங்கரம்
ரஷ்ய ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 15 பேர் படுகாயம் அடைந்தனர். உக்ரைனுக்கு அருகே பெல்கோரட் பகுதியில் உள்ள ரஷ்ய ராணுவ தளத்தில் சோவியத் ரஷ்ய ஆதரவாளர்கள் 2 பேர் பயிற்சி ராணுவ வீரர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களும் இதில் உயிரிழந்த நிலையில், மேலும் 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் முதலில் பெல்கோரட் நகரில் பொதுமக்கள் யாரும் இந்தத் தாக்குதலில் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 3 பேர் காயம் அடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் படையெடுப்பிற்காக படைகளை அணி திரட்ட புதின் உத்தரவிட்ட நிலையில், ராணுவ தளத்தில் இந்த மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.