அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் - பயணிகள் பகீர் குற்றச்சாட்டு

x

தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை செல்வதற்கு 35 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது . ஆனால் சமீபகாலமாக கும்பகோணம் கோட்ட கழக பேருந்துகளில் காப்பீடு மற்றும் சுங்கவரி என கூடுதலாக ஒன்பது ரூபாய் சேர்த்து 45 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சுங்கசாவடியே இல்லாத போது, சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், தமிழக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்