"மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்?" - உச்சநீதிமன்றம் வேதனை

x

"மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்?" - உச்சநீதிமன்றம் வேதனை

மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம் ? என, வெறுப்பு பேச்சுகளை தடுக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

நாட்டில் இஸ்லாமியர்களை குறி வைத்து அச்சுறுத்தப்படும் வெறுப்பு பேச்சு சம்பவங்களையும் தடுக்கவும், அவை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட கோரி கேரளத்தை சேர்ந்த ஷாகீன் அப்துல்லா தாக்கல் செய்த ரிட் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே. எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜனநாயகம், மத சார்பற்ற நாட்டில் வெறுப்பு பேச்சுகள் உண்மையிலேயே கவலை கொள்ள செய்வதாக தெரிவித்தனர். வெறுப்பு பேச்சுகள் கண்டிக்கத்தக்கவை என்றும், மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்? என வேதனை வெளியிட்டனர். மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுவதாக கூறிய நீதிபதிகள், எவ்வித மதத்துக்கும் எதிராக பேசப்படும் வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக புகார்களுக்கு காத்திருக்காமல், தானாகவே முன் வந்து வழக்கு பதிவு செய்ய டெல்லி, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர். புகார்களை பதிவு செய்ய மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக பார்க்கப்படும் என்றனர்.


Next Story

மேலும் செய்திகள்