உத்தவ் தாக்கரே vs ஏக்நாத் ஷிண்டே... அதிகாரபூர்வ சிவசேனா யார்? - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

x
  • ஆளுநர்களின் செயல்பாடுகள் மாநிலங்களின் அரசியலை பாதிக்கின்றன என உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
  • மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்த்த ஏக்நாத் ஷிண்டே, பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.
  • இதற்கு எதிரான மனுக்களை, உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
  • நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, உத்தவ் தாக்கரே சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் நிலுவையில் இருப்பது தெரிந்தும், ஆளுநர் அவருக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்ததாக குறிப்பிட்டார்.
  • துரதிருஷ்டவசமாக ஆளுநரின் இது போன்ற செயல்பாடுகளால், மாநிலங்களின் அரசியல் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்த கபில் சிபல், ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை மீறி அதன் சட்டப்பேரவை கட்சி செயல்படக்கூடாது என வாதிட்டார்.
  • இந்த வழக்கில் இன்றும் விசாரணை நடைபெறவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்