நாட்டை உலுக்கிய விவசாயிகள் படுகொலை வழக்கு.. மத்திய அமைச்சர் மகனுக்கு இடைக்கால ஜாமின்

x

உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூர் கிரியில் கடந்த 2021, அக்டோபர் 3-ந் தேதி நிகழ்த்தப்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 19ஆம் தேதி ஒத்திவைத்தது.

இந்த நிலையில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 8 வார இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 வார இடைக்கால ஜாமீன் காலத்தில் உத்தர பிரதேசத்திலோ, டெல்லியிலோ அவர் தங்கி இருக்கக் கூடாது.

ஆஷிஷ் மிஸ்ரா அவரது கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும்.

விசாரணைக்கு மட்டுமே உத்தர பிரதேசத்திற்கு செல்ல வேண்டும்.

சாட்சிகளை, ஆதாரங்களை ஆஷிஷ் மிஸ்ராவோ உள்ளது அவரது குடும்பத்தினரோ கலைக்க முயன்றால் இடைக்கால ஜாமினை ரத்து செய்ய நேரிடும்.

இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது நடத்தையை கண்காணித்து ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமினை நீட்டிப்பது குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும்.

ஒவ்வொரு நாளும் நடைபெறும் விசாரணை குறித்து அறிக்கையை விசாரணை நீதிமன்ற நீதிபதி உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

ஆஷிஷ் மிஸ்ரா உடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள மீதமுள்ள நான்கு பேருக்கும் இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்